வாக்கு சுத்தமாக இருந்தால் வாழும் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதே. கடமைக்கு தான் பேசுகிறார்கள் என்று தெரிந்த பிறகு உரிமையோடு பேச முடிவதில்லை சில உறவுகளோடு. தனிமைக்கு அஞ்சாதீர்கள். யாரிடமும் கெஞ்சி காத்திருக்காதீர்கள். நிலையான உறவு இல்லை உலகில். உங்கள் நிழலும் உங்களை விட்டு நீங்கும் இருளில். எதிர்பார்ப்பில்லாமல் வாழ கற்றுக்கொண்டால் உங்கள் வாழ்க்கை ஏமாற்றம் இல்லாமல் நகரும்.